காலத்தின் கல்வெட்டு!

மேலை நாடுகளிலிருந்து ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுக்குத் தொடர்புடையது என்று தீவிரமாகச் சொல்லிவந்தபோது, தமிழகத்திலிருந்து இன்னும் ஆதாரபூர்வமாக ஒலித்த குரல் ஐராவதம் மகாதேவனுடையது. ஐ.ஏ.எஸ். அதிகாரி, தினமணி நாளிதழின் ஆசிரியர் என்ற சிறப்புகள் இருந்தாலும் அவரே விரும்பிய, அவருக்குப் பெருமை சேர்த்த அடையாளம், ‘தொல்லியல் அறிஞர்’ என்பது தான். கடந்த திங்களன்று இயற்கை எய்தினார் ஐராவதம் மகாதேவன்.  சிந்துசமவெளி திராவிட ஆய்வுகுறித்துத் தொடர்ந்து செயல்பட்டுவரும் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐராவதம் மகாதேவனின் பெருமை பகிர்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick