சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

வாடகை பெயரும் வீடு

1
பெரு நகரத்திற்குக் குடிபெயர்ந்தபோது
சொந்த வீட்டிலிருந்து
தனக்கான யாவற்றையும்
அம்மாவின் பழைய கைப்பையிலும்
தன்னிரு கைகளிலும்
அள்ளிக்கொண்ட மகள்
வீட்டினை லாரியில் தூக்கிவருவார்கள்
என்ற பொய்யினை
நம்பியதும் தூங்கிவிடுகிறாள்.

2
முதல் நாளில் அகலமாகவும் உயரமாகவும்
அடுக்கிவைக்கப்பட்ட வீட்டுச் சன்னல்களில்
திரைச்சீலைகளும் குழந்தைகளும்
தொங்கிக்கொண்டிருப்பதை
வேடிக்கை பார்த்தவளுக்கு
புதிய வீட்டின் திறக்கப்படாத கதவுகள்
கவனத்தில் வரவில்லை

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close