நம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்!

மிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களை அடையாளப் படுத்தி கௌரவிக்கும் நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ விருது வழங்கும் நிகழ்வு சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைகளில் சாதித்த சாதனைத் தொழிலதிபர்கள் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பெற்றனர். 

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசனின் வரவேற்புரையுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்நாடு சி.ஐ.ஐ அமைப்பின் தலைவரும், பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி சிறப்புரை ஆற்றினார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அவர், ``தொழில் துறையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட இன்னும் நிறைய வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பினை எல்லாத் தொழில்முனைவர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick