ஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்!

‘`இந்தக் கனி மடியில் விழாதா என, பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” - ‘நாடோடி மன்னன்’ விழாவில் இப்படிச் சொன்னார் அண்ணா. அந்த அண்ணாவின் பாசத்துக்குரிய எம்.ஜி.ஆர், ‘இதயக்கனி’யும் தந்தார் ‘அண்ணா தி.மு.க’-வையும் படைத்தார். அந்த அண்ணா தி.மு.க-வும் அதன் ஆட்சியும் இப்போது பி.ஜே.பி-யின் கைப்பிள்ளையாக மாறிவிட்டது.

அ.தி.மு.க-வுக்கு எம்.ஜி.ஆர், 15 ஆண்டுகள்தான் தலைமை தாங்கினார். ஜெயலலிதாவோ 27 ஆண்டுகள் ‘ஒன்மேன் ஆர்மி’யாகக் கட்சியை வழி நடத்தினார். ஜெயலலிதா இல்லாத  இரண்டாண்டுக் கால அ.தி.மு.க-வும் அதன் ஆட்சியும் எப்படியிருக்கிறது?

ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சியை வழி நடத்தக்கூடிய ஆளுமைத் திறன் யாருக்குமில்லை.  பன்னீர்செல்வமும் எடப்பாடியும் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 46 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்ட... மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கிற... நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிற ஒரு கட்சிக்கு, தலைவனைக்கூடத் தேடிக் கண்டெடுக்க முடியவில்லை.  பன்னீரையும் எடப்பாடியையும் அ.தி.மு.க உறுப்பினர் அட்டையே இல்லாத மோடி வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick