உள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா

- சக்திவேல், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`திமுக கூட்டணி’ தர்பார் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. கூடவே கலகங்களும் தொடங்கிவிட்டன.

திமுக பொருளாளர் துரைமுருகன், “தோழமைக் கட்சிகள் வேறு; கூட்டணிக்கட்சிகள் வேறு” என்று பேட்டிகொடுக்க, பரபரவென்று கிளம்பியது கூட்டணிக் குழப்பம். மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ, “துரைமுருகனின் கருத்தால் மதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள்” என்று குமுறினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ``திமுக தனித்து நிற்பது விஷப்பரீட்சை” என்று வருத்தத்தைப் பகிர, இருவரையும் அறிவாலயத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார், திமுக தலைவர் ஸ்டாலின்.

திருச்சியில் நடைபெற்ற ‘மேக்கேதாட்டு’ அணைக்கு எதிரான போராட்டத்தில், ஸ்டாலின் தலைமையில், வைகோவும் திருமாவும் மேடையேறி முழங்கினார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சிபிஐ முத்தரசன், சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆகியோரும் மேடையேறி, ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

டிசம்பர் 9-ம் தேதி டெல்லி சென்ற ஸ்டாலின், சோனியா காந்தியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ராகுல் காந்தியுடனும் உரையாடினார். இதையடுத்து, “திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமானது” என்று ராகுல் ட்வீட் போட, ஸ்டாலின், “திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காகப் பணியாற்றும்” என்று, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சிலர், “கடந்த சில மாதங்கள் வரை, பிஜேபி தரப்பிலிருந்து, திமுகவுடன் கூட்டணிக்குப் பேசப்பட்டது. ஆனால், ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. `கழகங்கள் இல்லாத தமிழகத்தை கற்பனைகூட செய்து பார்க்காதீர்கள்’ என்று இறங்கி அடித்திருக்கிறார். அதில் அரசியல் பார்வையும் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick