வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வலைபாயுதே

twitter.com/kumarfaculty
இரண்டு பேரில் ஒருவர் மட்டும் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலை உலகின் கடைசி இரு மனிதர்களுக்குள்ளும்கூட நடக்கக் கூடாது...!

twitter.com/udaya_jisnu

கல்யாணப் பத்திரிக்கைய முதல்ல குலதெய்வத்துக்குப் படைக்கிற மாதிரி, புதுப் பாட்டு எது வந்தாலும் முதல்ல வடிவேலுக்குத்தான் `படைக்கிறாங்க’ மீம் கி்ரியேட்டர்ஸ்...

twitter.com/smhrkalifa

கடற்கரைகள், பூங்காக்கள், திரையரங்கின் கார்னர் சீட்டுகள் வரிசையில், காதலர்களுக்கு பிடித்த இடமாக பாஜக பொதுக் கூட்டங்களும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

twitter.com/ HAJAMYDEENKS
இப்பல்லாம் வடிவேலு காமெடி பார்க்கும் போது அதை வைத்து ஹிட்டடித்த மீம்ஸ்களும் கண் முன்னே வந்து சிரித்து விட்டுப் போகிறது!

twitter.com/ itsjoker

காதலி மனைவியான பின் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பு.
“உங்களுக்குக் கொஞ்சம்கூட அறிவே இல்லைங்க” என்பதுதான்.
#மனைவியதிகாரம்

twitter.com/annainpillai
சிம்பு தனக்குப் பெண் பார்க்கச் சொல்கிறார் - டி.ராஜேந்தர் #இனி வந்தா மாப்பிள்ளையாதான் வருவார் மொமென்ட்!

twitter.com/motheen_farook

`மைல்டு அட்டாக்’ ன்றதுஇறைவனுடைய மிஸ்டு கால்..!

twitter.com/ manipmp
ஆழமான பேச்சு நீளமாய் இருப்பதில்லை
நீளமான பேச்சு ஆழமாய் இருப்பதில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick