சொல்வனம்

புல்லுக்காக  நெல்லுச் சுமை

மொ
ளக்குச்சியில் வளர்ந்த கயிற்றின் நுனி எருது
வண்டிச் சக்கரம்போல் நிலத்தை மேய்ந்திருந்தது

திமிலை எடுப்பாகவும்
தசைகள் ஒரு பீஸ்கூட  அதிகமாகாமலும் பார்த்துக்கொண்டது

நெருக்கி அடுக்கப்பட்ட மூட்டைகளை
நாக்கில் நுரை பொங்க இழுக்கப் பழக்கப்பட்டிருந்தது

லாடம் பெயர்ந்து ரத்தம்
ஊற்றிய போதும்
வண்டியை இழுத்து வீடு சேர்த்தது

சாட்டைவிழுந்த தடங்களும், அதன் நுனி ஆணிக் காயங்களும்
முதுகிலும் தொடையிலும்
கழுத்துத் தழும்பில் சிலுவை போன்ற வண்டியின் நுனி
பொருத்தப்படுகையில்
சிலுவைப் பாதை ஆரம்பமாகிறது

புல்லுக்காக நெல்லு சுமக்கும் வரலாறு
இன்னும் திருத்தி எழுதப்படாமலே

மேய்ச்சல் நிலத்தில் அவிழ்த்து விடப்படுகையில்
கொம்பு அரும்பிய கன்றுக்கு முட்டுப்பழக்குகிறது எருது.

- பூர்ணா ஏசுதாஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick