“நிவின் பாலி செம வாலு!”

சுஜிதா சென்

லையாள மண்ணின் மோஸ்ட் வான்டட் நாயகி, ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்தடுத்து இரண்டு ஹிட். அதில் சமீபத்தில் வெளியான ‘மாயாநதி’ மல்லுவுட்டில் மெகாஹிட்.

``முதல் படத்துல நிவின் பாலி, ரெண்டாவது படத்துல டொவினோ தாமஸ். ரெண்டு பேருமே என்கூட நடிச்ச நடிகர்கள் மட்டும் இல்ல. என் நண்பர்களும்கூட” என்று நிறைய மலையாளமும் கொஞ்சும் தமிழுமாகப் பேசுகிறார்.

“டாக்டருக்குப் படிச்சுட்டு நடிகையாகிட்டீங்களாமே...”

“ஆமாங்க... நான் மெடிக்கல் காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும்போதே மாடலிங் பண்ணிட்டிருந்தேன். கேரளாவில் வெளியாகிற நிறைய பத்திரிகைகளின் கவர் கேர்ள்  நான்தான். தமிழ் மற்றும் மலையாள விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். இதை ஒரு பொழுதுபோக்காதான் பண்ணிட்டிருந்தேன். மிகப்பெரிய மாடலா வரணும்னு எனக்கு எந்தக் குறிக்கோளும் இருந்ததில்ல. மாடலிங் மூலமாதான் சினிமா வாய்ப்பு வந்துச்சு. ‘நண்டுகளுடே நாட்டில்  ஓரிடவேளா’ படம்தான் முதல் படம். நிவின்பாலிதான் ஹீரோ. அந்தப் படம் கத்துக்கொடுத்த அனுபவம் சினிமா மேல இருந்த பார்வையையே மாத்திருச்சு.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்