“அம்மாவைப் பார்த்து நடிகையானேன்!”

சுஜிதா சென்

டிகையாக  `ஹலோ’ சொல்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி. தெலுங்கில் கல்யாணி அறிமுகமான ‘ஹலோ’ செம ஹிட்.  அம்மா லிஸியை வரவேற்றது போலவே கல்யாணிக்கும்  எனர்ஜி லைக்ஸ் போடுகிறார்கள் ரசிகர்கள்.

முதல்படத்திலேயே நாகார்ஜுனனின் இளையமகன் அகில் அக்கினேனி நாயகன், விக்ரம் கே.குமார் இயக்கம் என கல்யாணியின் என்ட்ரியே அதகளம். ஏற்கெனவே தமிழில் `இருமுகன்’ படத்தில் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றியவர்தான் இந்த கல்யாணி.

“இத்தனை வருஷமா காத்திருந்தது இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான். என் அப்பாவுக்கு அடுத்தபடியா நான் பார்த்து வியந்த ஒரே இயக்குநர் விக்ரம் குமார் சார்தான். எந்த ஒரு அறிமுக ஹீரோயினுக்குமே இதைவிட ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்காது.  நான் செம லக்கி” என்று படபடவெனப் பேச ஆரம்பித்தார் கல்யாணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick