மதுரவீரன் - சினிமா விமர்சனம்

சாதியால் பிரிந்துகிடக்கும் ஊர், அங்கே அப்பா காணுகிற ‘சமத்துவ’ ஜல்லிக்கட்டுக் கனவை நிகழ்த்திக் காட்டும் மகனே ‘மதுர வீரன்.’

 பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைப் பின்னணியல் சாதிப்பெருமை பேசாமல் ஒரு படம். அக்கறையோடு கதை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் முத்தையாவைப் பாராட்டலாம்.   அதை, பிரசாரம்போல இல்லாமல் அழகாகத் திரைக்கதையமைத்து கமர்ஷியல் பந்தி வைத்திருக்கிறார்!

ஹீரோ ஷண்முக பாண்டியன் ஓங்குதாங்காய் தெக்கத்தி டெர்மினரேட்டராய் கம்பீரமாய் இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கோயில் காளையைப்போலச் சீறிப்பாய்கிறார். நடனம் தவிர எல்லாம் பக்கா மக்கா!

ஷண்முக பாண்டியனின் அப்பாவாக சமுத்திரக்கனி... கம்பீரக்கனி. மிக அழுத்தமான பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோயின் மீனாட்சி. மண் வாசனையோடு வெடுக் துடுக் என மதுரைப் பெண்ணாய்  மனசில் நிற்கிறார். தேர்ந்தெடுத்து நடித்தால் கிராமத்து ரோல்களில் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது!  பால சரவணனின் இயல்பான காமெடி கவுன்ட்டர்கள் நிறையவே சிரிப்பை வரவழைக்கின்றன. கொஞ்சநேரமே வந்தாலும் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசும் `பனானா’ பவுன்ராஜின் பன்ச்சுகளுக்கு தியேட்டரே குலுங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்