ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - சினிமா விமர்சனம்

மனுக்குச் செய்த சத்தியத்தை எமசிங்கபுரத்தின் `எமன்’ விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா... என்பதே `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்.’

திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் வசிக்கிற மலைக்கிராமம் எமசிங்கபுரம். அந்த ஊர்த் தலைவியின் மகன் விஜய் சேதுபதி நண்பர்களோடு சென்னைக்குத் திருடக் கிளம்புகிறார். சில நாள்கள் `கடமைக்காகத்’ திருடிவிட்டு, கல்லூரியில் படிக்கும் கெளதம் கார்த்திக்கின் காதலி நிஹாரிகாவைக் கடத்திக்கொண்டு ஊருக்குப் பறக்கிறது விஜய் சேதுபதி டீம். காதலியை மீட்க நண்பன் டேனியலோடு சேஸிங்கில் சீறுகிறார் கெளதம் கார்த்திக். விஜய் சேதுபதி நிஹாரிகாவை எதற்காகக் கடத்தினார், எமனுக்குச் செய்த சபதம் என்ன, நிஹாரிகாவை கெளதம் மீட்டாரா என்பதை காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

சிரிக்கவைக்கும் முகபாவனைகள், அலட்டல் இல்லாத உடல்மொழி, படபடவென வெடிக்கும் வசனங்கள் என வழக்கமான விஜய்சேதுபதி.  கெளதம்கார்த்திக் ஒரு காலேஜ் பையனுக்கே உரிய படபடப்பு, அலட்சியமின்மை எனப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்