அன்வீரா

ஆர்.வைதேகி

`அன்வீரா’வுக்கு ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.  விஜய் டிவியின் `பகல்நிலவு’ சீரியலில் ஒன்றாய் நடிக்கும் சையத் அன்வர்-சமீரா ஜோடியின் ஃபேஸ்புக் பக்கம் இது.  சீரியலில் மட்டுமல்ல, `அன்வீரா’ நிஜத்திலும் அன்பால் இணைந்த அற்புதர்கள்!

2015 ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு நொடியையும் `அன்வீரா’ ஸ்பெஷலாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு காதல் நினைவு!

‘`ஹைதராபாத்ல ஒரு மாலில்தான் முதல்ல ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம். ‘நீங்க சமீராதானே? நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகர். உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா’னு கேட்டார் ஒருத்தர்.  நானும் வழக்கமா ரசிகர்கள்கூட போட்டோ எடுத்துக்கிற மாதிரி எடுத்துக்கிட்டேன். ‘நான் சனாவோட பையன் அன்வர்’னு சொன்னார். சனாங்கிறவங்க தெலுங்கு சீரியல்ல பாப்புலர் நடிகை. ‘சாரி... எனக்குத் தெரியாது. நான் உங்களை ரசிகர்னு நினைச்சிட்டேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும் மனசுக்குள்ள உறுத்தல். சனாம்மாவுக்கு போன் பண்ணி, நடந்த விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டேன். அதோட அந்த விஷயத்தை மறந்தாச்சு...

ஒரு மாசம் கழிச்சு சனாம்மாவோட வாட்ஸப் டிபியில அவங்க ஃபேமிலி போட்டோ, கூடவே டேபிள்மேல ஒரு கேக். வாட்ஸப் ஸ்டேட்டஸ்ல ‘ஹேப்பி பர்த்டே அன்வர்’னு இருந்தது. அன்வரைத்தான் எனக்குத் தெரியுமேனு  சனாம்மாவுக்கு ஹேப்பி பர்த்டே அன்வர்னு மெசேஜ் பண்ணினேன். அவங்க அன்வர் நம்பரை அனுப்பி, ‘நீயே நேரடியா விஷ் பண்ணிக்கோ’னு சொல்லிட்டாங்க. ரொம்பத் தயங்கித் தயங்கி, அன்வருக்கு விஷ் பண்ணினேன். அப்புறம் நான் ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிச்சேன். அப்போ சனாம்மாவுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினபோது, அன்வர் பேர் காட்டியது. அவரைத்தான் தெரியுமே... கொஞ்ச நேரம் சாட் பண்ணலாமேனு ஒரு ஃபீலிங்ல இருந்தப்ப, ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்கணும்... பை’னு சொல்லிட்டு, கட் பண்ணிட்டுப் போயிட்டார். எனக்கு செமக் கடுப்பு. அடுத்த நாள்தான் அன்வருக்கு ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அடுத்த செகண்ட் அக்செப்ட் பண்ணிட்டார். அன்னிக்கு முழுக்க விடிய விடிய சாட் பண்ணினோம். பேசிப் பேசித் தீர்த்தோம்.  அப்பவே அன்வர்க்கு ரோஸ் மில்க் வாங்கித் தரச் சொல்லிடுச்சு மனசு...’’ சமீராவின் வாய்பொத்தி அர்ஜென்ட் என்ட்ரி கொடுக்கிறார் அன்வர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick