சென்னையின் ஷாஜகான்!

சக்தி தமிழ்ச்செல்வன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்மை செய்ய நன்மை செய்யப் பிறந்தவன்.

ரெண்டு உள்ளங்களை உள்ளங்களைச் சேர்த்துவைக்க இவன் உயிரையும் கொடுப்பவன்’ என்கிற வரிகளையே வாழ்க்கையாக்கிக்கொண்டு வாழ்கிறார் உமாபதி.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள மாநகராட்சிப் பூங்காவில் அமர்ந்து மொபைலில் பேசிக்கொண்டிருந்தார் உமாபதி. ‘`ஆமா, பிப்ரவரி 14-ம் தேதி கரெக்டா பீச்சுக்கு வந்துருங்க’’ என யாரிடமோ மிகப் பொறுப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் சிரித்தபடியே வரவேற்றார். ‘`அது ஒண்ணுமில்லைங்க, பிப்ரவரி 14-ம் தேதி பீச்ல இருக்குற காதலர்களை எல்லாம் தாலி கட்டிக்கச் சொல்லி மிரட்டுறது, அடிக்கிறதுனு சிலர் ரொம்ப அநியாயம் பண்ணுவாங்க. அதான் நம்ம நண்பர்கள் லவ்வர்ஸோட சேஃப்டிக்காக அங்க இருப்போம்’’ என்றவர், இதுவரை 200-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து சாதனை படைத்திருக்கிறார்.

  “நல்லா படிச்சிருந்தாலும் நல்ல வேலைல இருந்தாலும், வேற வேற சாதியினாலே வீட்ல ஒப்புக்காம ரொம்பப் பிரச்னை பண்ணுவாங்க. இரண்டு பேருமே மேஜர்னு தெரிஞ்சா சட்டப்படி கல்யாணம் பண்ணி வெச்சு ரிஜிஸ்டர் பண்ணிருவோம். ஆனா அதுக்கு முன்னாடி அந்தப் பையனைப் பத்தி அந்தப் பையனோட ஊர்ல இருக்கற நம்ம நண்பர்கள்கிட்ட சொல்லி விசாரிப்போம். ஏன்னா, அது ஒரு பொண்ணோட வாழ்க்கை. ரொம்ப வருஷம் நிம்மதியா வாழணும்ல” என அக்கறையுடன் பேசுகிறார் உமாபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick