அடித்தலும்... திருத்தலும்!

வாசுகி பாஸ்கர், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

லகின் எந்தக் குறிப்பிட்ட வரையறைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதைகள், கதைகள், திரைப்படங்கள் எனப் பொதுவுணர்வாய் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, உலகம் பொதுமறையாய்க் கொண்டாடித் தீர்ப்பது காதலைத்தான். ஆயிரமாயிரமாண்டு கடைப்பிடித்து வந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இருக்குமிடம் தெரியாமல் பிரபஞ்சத்துக்கு அப்பால் வீசியெறிய வல்லது காதல்.

டெல்லியிலிருந்து ஐரோப்பா வரை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சைக்கிளில் பயணமாகி தன் காதலியைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்துகொண்ட பிகே மஹாநந்தியாவின் நிஜக் காதல் கதையிலிருந்து, பேரிலக்கியங்கள் பேசிய புனைவுக் காதல்கள் வரை காதலின் கதைகளும், பரிணாமங்களும் அவை பேசிய உன்னதமும் எண்ணில் அடங்காதவை. வீரமும் காதலும் கொஞ்சம் அதிகப்படியாகவே இடைப்பட்ட காலங்களில் சித்திரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டிருக்கிறது. போரில் தோற்றவனும், காதலில் தோற்றவனும் வாழ்வதற்கான தகுதியை இழப்பவனாய் போதிக்கப்பட்டு, சுயமிழந்து திரிவதே காதல், தெய்விகக் காதல் போன்ற பிம்பங்களிலிருந்து தற்காலச் சமூகம் வெளியேறி வந்தாலும், உதாரணக்காதலாய் நம்முன் நிறுத்தப்பட்டது  வரலாற்றுப் பிழைகள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்