பிப்ரவரி 14... மருதமலை முருகன் கோயில்!

தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி

“திருநங்கைகளுக்காக நடத்தப்படுற ஒரு அமைப்புல நான் வேலை செஞ்சிட்டிருந்தேன். எனக்கு திருநங்கைகளைப் பார்த்தா ஒரு பயம் இருக்கும். கண்டுங்காணாத மாதிரி இருப்பேன். அந்த மனநிலையில இருந்த நான், ஒரு திருநங்கையையே திருமணம் செஞ்சிருக்கேன்னா அப்படியொரு தூய்மையான அன்பை என்னால புறக்கணிக்க முடியல சார்” - ஸ்வேதாவின் தோள்களை  அணைத்தபடி பேசுகிறார் பிரபாகரன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல எதிர்ப்புகளையும் மீறி ஒரு திருநங்கையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர் பிரபாகரன். காதல் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக்கூடிய உணர்வு ரீதியான பந்தம் மட்டுமே என்கிற எண்ணங்களையெல்லாம் உடைத்த ஜோடிகளுள் ஒன்றான இவர்களை மெரீனா கடற்கரையில் சந்தித்தேன்.

“பிரபு ஃபீல்டு ஆபீஸரா வேலை செஞ்சிட்டிருந்த அமைப்புலதான் முதல்முறையா பார்த்தேன். அங்க வேலை சார்ந்து இவரோட பேச வேண்டியது அதிகமாச்சு. எங்களுக்கு வந்தது லவ்வா, ஃப்ரெண்ட்ஷிப்பான்னு தெரியாமலேயே பேசிப் பழகிட்டிருந்தோம். பேசுற நேரம் நாளுக்குநாள் அதிகமானதே தவிர குறையவே இல்ல. எது ஒண்ணுன்னாலும் மறக்காம ஷேர் பண்ணிக்குவோம். அது அப்படியே லவ்வா மாறுதுன்னு ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிடுச்சு. ஆனா இவர் என்ன நினைச்சுப்பாரோன்னு நான் ப்ரபோஸ் பண்ணல” எனக் கைகளால் வாயைப் பொத்தி நாணத்துடன் கண்களைச் சிமிட்டிச் சிரிக்கிறார் ஸ்வேதா.

“நான்தான் சார் ஸ்வேதாவுக்கு ப்ரபோஸ் பண்ணுனேன். அதைக் கேட்டுட்டு, கொஞ்ச நேரம் அழுதுட்டேயிருந்தாங்க. ஆனா அந்த அழுகை சந்தோஷத்தாலதான்னு மட்டும் எனக்குத் தெரியும்” எனச் சொல்லிச் சிரித்த பிரபாகரனிடம் “உங்க வீட்ல எதிர்ப்பு இருந்திருக்குமே?” என்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick