என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா?”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கமல்ஹாசன்

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடன் ஒவ்வொரு முறையும் உரையாட நேரும்போதெல்லாம் மொழி, கலாசாரம், கலை, கிராமங்களுடனான பழைய நினைவுகள்... இப்படி அவர்களின் தமிழக நேசத்தை உணர முடியும். Absence make the heart grow fonder என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படி இங்குள்ளவர்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள் தமிழகம்மீது உணர்வோடு இருப்பது புரியும். நாடு கடந்தும் நாட்டைப் பற்றிய சிந்தனையிலேயே வாழும் அந்த நம்மவர்களின் உணர்வு, இன்று தமிழ்நாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுக்கும் வந்துவிட்டது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டின் புகழ், எங்கோ தள்ளிப்போய்விட்டது என்கிற பதற்றம். அதனால், இங்குள்ள, புலம்பெயர்ந்த தமிழர்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் யோசிக்க ஆரம்பித்திருப்பது நல்ல தொடக்கம்.

தமிழ்நாட்டின் மீதான இந்தப் பாசத்தையும் பற்றையும் செயலாக மாற்ற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான என் வேண்டுகோள். அதைப்பற்றிப் பேசுவதற்குத்தான் நான் இப்போது அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஹார்வேர்டு மட்டுமல்ல, எங்கெல்லாம் பேச முடியுமோ, அங்கெல்லாம் போய் என் குரலை அவர்களுக்கு எட்டவைப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick