தொல்லியல் தொண்டர்!

சக்தி தமிழ்ச்செல்வன், படம்: ப.சரவணகுமார்

ராளமான ஆய்வு நூல்கள், லென்ஸ், சுற்றிலும் பண்டைய கால ஓவியங்கள் என நாகசாமியின் வீடே ஒரு மியூசியம் போல்தான் இருக்கிறது. தொல்லியல் துறையில் குறிப்பிடத்தகுந்த பணிகளைச் செய்ததற்காக 2017-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது நாகசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதாகும் நாகசாமி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் என்ற பெருமை பெற்றவர். பெசன்ட் நகர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவரை வாழ்த்துகளோடு சந்தித்தேன்.

தமிழ்க் கல்வெட்டுகள், மதுரை திருமலை நாயக்கர் மஹால், பாரதியார் வாழ்ந்த வீடு ஆகியவை குறித்த ஆச்சர்யமூட்டும் ஏராளமான தகவல்கள் அவரிடமிருந்தன.

கொடுமுடியின் அருகிலுள்ள ஊஞ்சலூர் தான் நாகசாமியின் சொந்த ஊர். தன் சொந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை  படித்தவர். அதன் பிறகு கொடுமுடியில் பத்தாம் வகுப்பு வரை சம்ஸ்கிருதத்தை ஒரு மொழியாக எடுத்துப் படித்திருக்கிறார். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சம்ஸ்கிருத இலக்கியத்தில் பி.ஏ ஹானர்ஸ் முடித்த கையோடு சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவுத் தலைவராக 1959-ல் பணியில் சேர்ந்தார் நாகசாமி.

``எனக்குச் சின்ன வயசுலயிருந்தே இலக்கியம்லாம் படிக்கிற பழக்கம் இருந்ததால, எனக்கு அந்த வேலை ரொம்பப் பிடிச்சிருந்தது. அருங்காட்சியகத்துல சேர்ந்ததுக்கு அப்புறமா அங்க இருந்த பாரதியார் கைப்பட எழுதின கவிதைகளை முதன் முதலாக  பொதுமக்களோட பார்வைக்குக் காட்சியாக வச்சேன், நல்ல வரவேற்பு கிடைச்சது” என்பவரின் கண்களில் அவ்வளவு பரவசம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்