எடப்பாடியின் வேடிக்கை பார்க்கலாம் வாங்க!

கர்நாடகத் தேர்தல்... காவிரி அரசியல்ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

முதலில், ‘நடந்தாய் வாழி காவேரி’யாய் இருந்தது. பிறகு ‘நின்றாய் காவிரி’ ஆனது. அதன் பிறகு, ‘உட்கார்ந்தாய் காவிரி’ ஆனது. அதனினும் பிறகு, ‘படுத்தாய் காவிரி’ ஆனது. இனிவரும் காலத்தில், ‘முடங்கினாய் காவிரி’  ஆகப்போவது தெரிகிறது.

காவிரிக்கு முதலில் கர்நாடக அரசியல் கட்சிகள் தடுப்பணை போட்டன. கர்நாடக மாநில அரசு தடுப்பணை போட்டது. மத்திய அரசுகள் தடுப்பணை போட்டன. இதோ இப்போது உச்ச நீதிமன்றமும் சேர்ந்துகொண்டது. ‘மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே குளிப்பது?’ என்ற பழமொழியையே கேட்க வேண்டி இருக்கிறது.

‘இதற்கு மேல், மேல் முறையீடு செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இறுதித் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கும் - காவிரி உரிமைக்குமான இறுதிச் சடங்கு நடத்தும் தீர்ப்பு.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி நீரை, அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு 192 டி.எம்.சி அளிக்க வேண்டும். அதனை 177.25 டி.எம்.சி-யாகக்  குறைத்த நிலையில் தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி குறையும். 14.75 டி.எம்.சியை எப்படிக் குறைக்கலாம் என்று சிலரும், 14.75 டி.எம்.சிதானே குறைத்துள்ளார்கள் என்று சிலரும் பூசிமெழுகிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இழந்திருப்பது வெறும் 14.75 டி.எம்.சி தண்ணீர் மட்டுமன்று. நாம் இழந்திருப்பது காவிரியின் முக்கால் பங்குக்கும் மேலான நீரை என்பதுதான் வரலாறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick