"தோத்துடுவோம்னு பயப்படக்கூடாது!” | Should not fear about losing - Viswanathan Anand - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/01/2018)

"தோத்துடுவோம்னு பயப்படக்கூடாது!”

பரிசல் கிருஷ்ணா

``வந்துட்டேன்னு சொல்லு’’ என மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அதிரவைத்திருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

``மீண்டும் சாம்பியன்... எப்படி உணர்கிறீர்கள்?’’ 

``10-15 வருஷங்கள் உலக சாம்பியனா இருந்தேன். இடையில் சில வருடங்கள் சரியாவே விளையாடல. கடந்த வருஷம் சில போட்டிகள்ல  இறுதிப்போட்டிக்கு வர்றதுக்கே ரொம்ப சிரமப்பட்டேன். ‘ஏன் நாம இவ்ளோ கஷ்டப்படுறோம்’னு எனக்கே என்மேல நம்பிக்கை போயிருந்தது. அதுனால நிறைய ப்ராக்டீஸ் எடுத்துட்டுதான், ரேபிட் செஸ் ஃபார்மேட்ல கலந்துகிட்டேன். ஜெயிப்பேன்னு ஆரம்பத்துல நினைக்கல. சில வருடங்களாகவே என் பேருக்கு முன்னால இல்லாத ‘உலக சாம்பியன்’ங்கற பட்டம் சேர்ந்ததில் ரொம்பவே சந்தோஷம்!”

``சீனியரான நீங்க, இளைஞர்கள்கூட விளையாடற அனுபவம் எப்படி இருக்கு? அதுக்கு உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கறீங்க?”

``திரும்பத் திரும்ப புதுசா கத்துக்கிட்டே இருக்கிறதுதான் ஒரே வழி. புதிய இளைஞர்கள் வர்றது, எனக்கு வயசாகறது... இந்த ரெண்டையுமே தடுக்க முடியாது இல்லையா?  அதனால அவங்க என்னென்ன டெக்னிக்ல விளையாடறாங்கனு நாமளும் அப்டேட் ஆகணும். இப்போதைய இளைஞர்களுக்கு ஸ்பீட் கன்ட்ரோல்ல நல்ல திறமையிருக்கு. அதனால, அவங்களோட ரேபிட் செஸ், பிளிட்ஸ் செஸ் போட்டிகள்ல விளையாடறது எனக்கு சவாலா இருந்தது. இந்த வெற்றி... அப்டேட்டா இருந்து, புதுசா கத்துக்கிட்டே இருந்தா வயசு ஒரு தடை இல்லைன்னு எனக்கே புரிய வெச்சது.”

 ``உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கிட்டீங்க?”

“தினமும் விளையாடினேன், ப்ராக்டீஸ் பண்ணினேன்னு சொல்ல மாட்டேன். ஒருவாரம் செஸ் பக்கமே போகாம மூளையை ஃப்ரெஷ் ஆக்கிட்டு, திரும்ப வந்து விளையாடுவேன். அதுதான் இப்ப உதவியா இருக்கு. அப்புறம் புது பிளேயர்ஸ் எப்படி விளையாடறாங்க, என்ன டெக்னிக், நான் யோசிக்கற மூவ்-க்கும் அவங்க பண்ற மூவ்-க்கும் என்ன வித்தியாசம்னு இதெல்லாம் கவனிக்கிறதும் பெரிய உதவியா இருக்கு.

தைரியமா எல்லா வகையான போட்டிகளிலும் கலந்துக்கணும். இதுல விளையாடுவேன், அதுல விளையாட மாட்டேன்னு சொல்றதோ... தோத்துடுவோம்னு பயப்படறதோ கூடாதுனு நினைக்கிறேன்.”

“செஸ் மாதிரி, நிஜ வாழ்க்கையிலும் அடுத்தடுத்த மூவ் இப்படி இருக்கணும்னு திட்டமிடுவீங்களா?’’

``அதே வியூகங்களை நார்மல் லைஃப்லயும் ட்ரை பண்றேன். ஆனா செஸ் மாதிரி வேற எதுலயும் நான் எதிர்பார்த்தமாதிரி ரிசல்ட் வந்ததில்லை.”

 ``ரசிகர்கள் ‘God Of Chess’னு உங்களைச் சொல்றாங்க. அதை எப்படி எடுத்துக்கிறீங்க?”

“நாம விளையாடறது நம்மளுக்கு மட்டும் இல்லை. பலருக்கும் ஊக்குவிப்பா இருக்குன்ற எண்ணமே சந்தோஷமா இருக்கு.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க