நான் அகதி! - 15 - நரகம் எப்படி இருக்கும்? | Refugees life around the world - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/01/2018)

நான் அகதி! - 15 - நரகம் எப்படி இருக்கும்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மருதன்

ரு தவளையைப்போல் கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடந்தது அந்த உடல். அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அருகில் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரே இடம் அகதி முகாம் மட்டும்தான் என்பதால் அந்த உடலுக்குச் சொந்தக்காரர் ஓர் அகதியாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்தார்கள். காவல் துறையினர் வந்து சேர்ந்தனர். உடலைச் சுற்றி சாக்பீஸ் கோடுகள் வரைந்து, படம் எடுத்துக் கொண்டார்கள். அது ஓர் ஆணின் உடல் என்பதை மட்டும்தான் உத்தரவாதமாகச் சொல்லமுடிந்தது. பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை வீசினார்கள். அவர் அகதியா? அவர் கொல்லப்பட்டிருக்கிறாரா? யார் கொன்றது? சீருடை அணிந்த அதிகாரிகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. உடலை அள்ளியெடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள்.

அருகிலுள்ளவர்களிடம் பேச்சு கொடுத்தபோது சில தகவல்கள் கிடைத்தன. ஆம், அவர் அகதிதான். எந்த நாட்டிலிருந்து வந்தவர் என்பது தெரியவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் அவரைப் பார்த்திருக் கிறார்கள். நினைவிலும் வைத்திருக்கிறார்கள். காரணம், அவர் மனவளர்ச்சி குன்றியவர். அவரை யாரேனும் தாக்கியிருக்கலாம். அல்லது ஒரு கும்பல் அடித்துக் கொன்றிருக்கலாம். எதற்காக என்று தெரியவில்லை. ஆனால், உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது நடந்திருப்பது கொலை என்பது உறுதியாகிறது. இது நடந்தது மானுஸ் தீவு என்னுமிடத்தில். உலகின் பார்வையிலிருந்து மிகத் தொலைவில் ஒளிந்துகிடக்கும் இந்தத் தீவு மர்ம மரணங்களுக்குப் பிரசித்தி பெற்றது. சில சமயம் உடல் கிடைக்கும், பல சமயங்களில் அதுகூடக் கிடைக்காது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க