ஸ்மைலி சுரேஷ் இப்போ செம ஹேப்பி!

ஆர்.வைதேகி

குட்டி க்யூட் ஸ்மைலிகள்தான் கீர்த்தி சுரேஷின் அடையாளம்.  ‘விஜய் 62’, ‘சாமி 2’, ‘சண்டைக்கோழி 2’, ‘மகாநதி’ என கீர்த்தி இப்போது பிசியோ பிசி. என்ன கேள்வி கேட்டாலும் முதலில் சிரித்துவிட்டுத்தான் பதில் சொல்கிறார் ஸ்மைலி சுரேஷ். அவரிடம் சிரித்துக்கொண்டே பேசியதில் இருந்து...

``விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என முதல் வரிசை ஹீரோக்களுடனேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே எப்படி?’’

சிரிக்கிறார்... ``ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதேசமயம் கொஞ்சம் பயமாவும் இருக்கு. ஆனா, எந்த ஃபீலிங்கையும் வெளில காட்டிக்காம இருக்கேன். ரொம்ப எக்ஸைட் ஆகக்கூடாதுன்னு அப்படியே கட்டுப்படுத்தியிருக்கேன். பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறோம்னு யோசிச்சா பயம் அதிகமாயிடும்.’’

``என்ன சொல்றாங்க உங்க ஹீரோஸ்?’’

‘`என்ன சொல்றாங்க’’ சிரிக்கிறார்... ``எல்லோருமே ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க.  ஒவ்வொருத்தர்கூட படம் பண்றதும் ஒவ்வொருவிதமான அனுபவம். அம்மா ஹீரோயினா இருந்தப்ப சிவகுமார் சார் ஜோடியா நடிச்ச படங்களைப் பார்த்துட்டு, `ஒருநாள் அவர் பையனுக்கு ஜோடியா நான் நடிப்பேன்’னு காமெடியா சொல்லியிருக்கேன். `தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல அது நடந்திருச்சு. சூர்யா சார் ரொம்ப சைலன்ட்.

‘அந்நியன்’ படத்தோட 100-வது நாள் விழாவுக்கு விக்ரம் சார் கேரளா வந்திருந்தபோது அந்த நிகழ்ச்சியோட பார்வையாளர்கள்ல நானும் ஒருத்தி. இன்னிக்கு அவர்கூட ‘சாமி 2’ படத்துல ஹீரோயின். என்னாலேயே நம்ப முடியலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்