புக்மார்க்

சாரு நிவேதிதாவின் கனவு நனவாகிறது. `தேர்ந்த மொழிபெயர்ப்பில் தன் புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர வேண்டும்’ என்பது சாருவின் 25 வருடக் கனவு. அவரின் நண்பர்கள் ராம்ஜி, காயத்ரி ஆரம்பித்திருக்கும் `ஸீரோ டிகிரி பப்ளிஷிங்’ மூலம் சாருவின் நான்கு நூல்கள் இந்த வருடம் வெளிவருகின்றன. ``ஃப்ராங்பர்ட் புத்தகக் காட்சியும், புக்கர் பரிசுமே இந்த வருடத்தின் லட்சியம்’’ என்கிறார் சாரு. இதுமட்டுமன்றி, பல எழுத்தாளர்களின் புத்தகங்களும் மொழி பெயர்க்கப்படவிருக்கின்றன. `நிலவு தேயாத தேசம்’ (துருக்கிப் பயணக்கட்டுரைகள்), `ஸ்ரீவில்லிபுத்தூர்’ (நாவல்) ஆகியவை இந்த வருடம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளிவரவிருக்கின்றன. `ஸ்ரீவில்லிபுத்தூர்’ நாவல், 200 வருடங்களில் வைஷ்ணவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பதிவுசெய்யும் நாவல். #வருது... வருது! விருது... விருது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick