இனி எல்லாம் விலையேற்றமே!

பாரதி தம்பி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

செம்மஞ்சேரியிலிருந்து கீழ்ப்பாக்கத்துக்கு வீட்டுவேலை செய்யவரும் வசந்தா, தினமும் இரண்டு பேருந்துகள் மாறி வர வேண்டும். போகும்போது இரண்டு பேருந்து. போக வர மொத்தம் 40 ரூபாய். இது கடந்த வாரம் வரை. இப்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணத்தின்படி அவர் 80 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு பஸ் கட்டணத்துக்கு இதுவரை 1,000 ரூபாய் செலவழித்திருந்தால், இப்போது 2,000 ரூபாய்.

கொடைரோடு அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள தன்னுடைய சாமந்திப்பூ அறுவடையை தினசரி அதிகாலையில் பேருந்து பிடித்து திண்டுக்கல் பூச்சந்தைக்குக் கொண்டு வருகிறார் வேலாயுதம். பேருந்துக்கும், பூக்கூடைக்கும் அவர் மாதம் ஒன்றுக்குச் செலவழித்த 1,500 ரூபாய் இப்போது இரு மடங்காகிவிட்டது.

திருச்செந்தூர் சூரசம்காரத்துக்கும், குலசேகரபட்டினம் தசராவுக்கும் குடும்பத்துடன் சென்றுவரும் ஒருவர் இனி சுளையாக 2,000 ரூபாயை எடுத்து வைக்க வேண்டும். பேருந்தில் தினசரி சரக்கு எடுத்து வந்து மளிகைக் கடை நடத்தும் ஒரு கிராமத்துச் சிறுகடை உரிமையாளர், அந்தக் கூடுதல் செலவைப் பொருள்களின் மீது வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பேருந்துக் கட்டண உயர்வு என்பது வெறுமனே மற்றுமொரு விலை உயர்வு அன்று. அது சமூகத்தின் சகல இயக்கத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், புறநகர்ப்பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வந்துசெல்கின்றனர். வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடை, பிறகு ஒரு பேருந்து, இன்னொரு பேருந்து என, ஒருவர் குறைந்தது இரண்டு பேருந்துகளையேனும் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்பு ஒருவர் வேலைக்குச் சென்றுவர நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் செலவழித்தார் என்றால், இப்போது அது 100 ரூபாய் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. அவர்களின் ஊதியம் நேற்று என்னவோ, அதுதான் இன்றைக்கும். செலவு மட்டும் திடீரென உயரும்போது எப்படி எதிர்கொள்ள முடியும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்