என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்! | Simmering storm within me - Kamalhaasan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கமல்ஹாசன்படம்: ஜி.வெங்கட்ராம்

`மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ம் தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே.’ ஆம், இந்தப் பயணத் திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இதுதான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப்பெயரை வைத்துள்ளோம்.  ‘சஸ்பென்ஸை ஆரம்பத்திலேயே உடைத்துவிட்டீர்களே, இதைக் கட்டுரையின் கடைசியிலாவது சொல்லியிருக்கலாமே’ என்று வாசகர்கள் பலர் நினைக்கலாம். சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ்... சினிமாவுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நிஜத்தில், களத்தில் மக்கள் பணியாற்ற வந்தபிறகு அனைத்தையும் நேர்படப் பேசிவிடுவதுதானே நல்லது. 

`‘கலைஞன் என்பதால்தான் பயணத்திட்டத்துக்கு சினிமாப்பெயரா’’ என்று கேட்கலாம். இன்று யாருடையதாகவோ உள்ள தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு பிரதேசமாக மாற்றிக்காட்டுவதற்கான எங்களின் கனவே இந்த ‘நாளை நமதே’. ‘`நேற்று, இன்றெல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள்’’ என்று சிலருக்குத் தோன்றலாம். ‘`செய்வதை, சொல்லாமலேயே செய்திடலாமே’’ என்றும் சிலர் நினைக்கலாம்.

ஆனால், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனெனில், நான் ஏதோ திட்டமே இல்லாமல் விமர்சிக்க மட்டுமே வந்தவன் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கான பதில்தான்  இந்த மீள்பார்வை. கடந்த 37 ஆண்டுகளாகச் செய்து குவித்த உதவிகளைப் பற்றிய மீள்பார்வை. அப்போது எனக்கு 23 வயசு. ரசிகனாக இருந்தவனிடம், ‘நாங்களெல்லாம் உங்கள் ரசிகர்கள்’ என்று வந்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, ‘ரசிகர்களா... எனக்கா...’ என்று அதிர்ந்தேன். சிறிதும் பெரிதுமான உதவிகளைச் செய்யச்சொல்லி அவர்களை ஒருங்கிணைத்தேன். ஒரு புள்ளியில், ‘ரசிகர்கள் என்ற பெயரில் அவர்களின் மனித மணிநேரங்கள் வீணாகக்கூடாது’ என்று முடிவெடுத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick