வீரயுக நாயகன் வேள்பாரி - 67

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

ருப்பன்குடி மூதாதையர்தாம் அதைக் கண்டறிந்தனர். எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. `எண்ணிலடங்கா காலத்துக்கு முன்னர் அது நிகழ்ந்தது’ எனச் சொல்வார்கள். அந்த ஆற்றுக்கு அப்போது பெயரிடப்படவில்லை. பெயரில்லாத அந்த ஆற்றின் வலக்கரை முழுவதும் செவல்படிந்த சிறுமண் பரப்பு. அதில் புதர் மண்டிய புற்காடு.

புல்லின் வகைகள்தாம் எத்தனை எத்தனை! வடிவத்திலும் நிறத்திலும் அவை ஏற்படுத்தும் வாசனையிலும் வகைப்படுத்த முடியாதவையாகத்தானே இன்று வரை இருக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் மேய்ந்தறியும் புல்லைக்கொண்டே மனிதன் தனக்கானதைக் கண்டறிந்தான். ஆவினத்தை மேய்த்துக் கொண்டிருக்கையில், புதர் ஒன்றில் நீள்தோகை கொண்ட பெரும்புல் விளைந்து கிடந்திருக்கிறது. மேய்த்துக்கொண்டிருந்தவன் அது என்ன வகைப் புல் என்பதை அறிய அதன் தோகையைக் கைகளால் பறித்துப்பார்க்க முயன்றிருக்கிறான். தோகையின் பக்கவாட்டுக் கூர்மை கிழித்துவிடக்கூடியதாக இருந்தது. அதன் நீள்தண்டு சற்றே வேறுபட்டு இருந்ததையும் பார்த்திருக்கிறான்.

மேய்ச்சல்வெளிதான் மனிதன் இயற்கையின் நுட்பத்தைக் கவனிக்கக் கிடைத்த முதற்பெரும் வாய்ப்பு. பறந்து அலையும் தும்பிகள் காலூன்றாப் புற்கள் எவை என்பது தொடங்கி, நீண்டிருக்கும் புல் நுனியில் செருகி நிற்கும் பனித்துளியின் கனம் வரை அனைத்தையும் அவன் அறிவின் சேகரமாக மாற்றிக்கொண்டிருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்