தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பார்வை எனக்குப் பிரச்னை இல்லை!” | Differently abled Judo Manoharan, chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2018)

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பார்வை எனக்குப் பிரச்னை இல்லை!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தமிழ்ப்பிரபா, படம்: பார்த்திபன் செல்வராஜன்

``எனக்கு 85 சதவிகிதம் பார்வை தெரியாது. இந்தப் பார்வைக்குறையால சின்ன வயசிலிருந்தே நான் சந்திச்சது கேலியும் அவமானங்களும்தான். எங்க ஏரியாவுல என்னை `புட்டிக்கண்ணா’னுதான் கூப்பிடுவாங்க. இந்தச் சமூகத்து மேல எனக்கு  இருந்த கோபம்தான் என் திறமையா வெளிப்பட்டதுன்னு நம்புறேன். அதனாலதான் சண்டைபோடுற இந்த விளையாட்டை அவ்ளோ வெறியா கத்துக்கிட்டேன்” - திருவள்ளூர் மாவட்டம்  சோழவரம் பகுதியைச் சேர்ந்த மனோகரனின் வார்த்தைகள்தாம் இவை. மனோகரன் இந்தியாவின்  ஜூடோ சாம்பியன். 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரின் பதக்கப்பட்டியல் மிக நீளமானது.

சரியான பார்வைத்திறன் கொண்டவர்கள்கூட, மனோகரனின் வேகமும், அவர் எதிரியைத் தடுக்கும் லாகவமும் கைகூடாமல் வியந்துபோய்ப் பேசுகிறார்கள். `கராத்தே’ எனும் தற்காப்புக் கலையை ஐந்து வருடங்களாகப் பயின்றவர், பிளாக் பெல்ட் உட்பட அனைத்தும் வாங்கிய பிறகு, தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி 2010-ம் ஆண்டு முதல் ஜூடோ கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தீவிரப் பயிற்சியாலும் தன்னம்பிக்கையாலும் `விழி சவால் கொண்டவர்’ பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து கலந்துகொள்ள ஆரம்பித்த மனோகரன் பதக்கங்களை வாரிக் குவிக்கிறார்.

அதிகம் படித்தவை