“விவசாயத்தை அழித்து சாலை போட வேண்டிய அவசியம் இல்லை!” - கார்த்தி காட்டம்

ம.கா.செந்தில்குமார்

விழுப்புரம் வழியா ஒண்ணு, ராணிப்பேட்டை-தர்மபுரி வழியா இன்னொண்ணுன்னு சென்னையில இருந்து சேலத்துக்குப் போக ஏற்கெனவே இரண்டு வழிகள் இருக்கு. இந்த இரண்டு சாலைகளையும் விரிவாக்கம் பண்ணலாமே, எதுக்குப் புதுச்சாலை? அப்படிப் புதுச்சாலை போடுற அளவுக்கு சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? விவசாய நிலங்களையும், 30 கிலோமீட்டருக்குக் காட்டையும் அழிச்சு இந்தச் சாலையை அமைக்கிறதா சொல்றாங்க. அது அவசியமே இல்லை!’’

பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்துக் கோபமாகப் பேசுகிறார் கார்த்தி. கிராமத்து நாயகனாக `கடைக்குட்டி சிங்கம்’ படத்தை முடித்துவிட்டார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தவரோடு உரையாடினேன். ரஜினி-கமல் அரசியலில் தொடங்கி, தமிழ்நாட்டுப் போராட்டங்கள், நடிகர் சங்க சவால்கள், இயற்கை விவசாயம், சூர்யா, கடைக்குட்டி சிங்கம் என முறுக்கு மீசையோடு நிறைய பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick