1995... - எடப்பாடிக்குப் பிடிக்காத ஃப்ளாஷ்பேக்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - படம்: கே.ஜெரோம்

ரலாறு என்பது எப்போதும் விநோதமானதுதான். அதுவும் அரசியல் வரலாறு என்பது கூடுதல் விநோதத்தன்மை கொண்டது. யாரெல்லாம் ஒவ்வொரு காலத்திலும் தங்கள் நிலைப் பாடுகளை மாற்றிவந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே மறந்தாலும், வரலாறு சுட்டிக் காட்டிவிடும்.

‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாநில சுயாட்சித் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டைச் சட்டசபையில் தி.மு.க எழுப்பியபோது, அனுமதி மறுக்கப்பட்டது. “கடந்த காலங்களில் இதே சபையில், கவர்னரைப் பற்றிப் பேசப் பட்டிருக்கிறது. அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருக்கின்றன’’ என ஸ்டாலின் சொன்னபோது, சபாநாயகர் தனபால், “சட்டசபை விதி 92, உட்பிரிவு 7, கவர்னர் குறித்துப் பேச அனுமதிக்க வில்லை. 1995-ம் ஆண்டு விதி தளர்த்தப்பட்டது. ஆனால், 1999-ம் ஆண்டு, அப்படி விதியைத் தளர்த்தக் கூடாது என, புதிய விதி சேர்க்கப் பட்டது. அந்த விதியைத் தளர்த்த விரும்பவில்லை’’ எனச் சொல்லி, கவர்னரைப் பற்றிப் பேச அனுமதிக்கவில்லை. அந்த ‘1995’-ல் அப்படி என்னதான் நடந்தது தமிழக சட்டசபையில்?

ஆளுநரைப் பற்றிப் பேச அனுமதிக்கப்படாத இதே அவையில்தான், அவரைத் துவைத்துக் கிழித்துத் தொங்கப்போட்டார் ஜெயலலிதா. அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. அவரின் வழித்தோன்றல்கள் இன்றைக்கு வழிமாறியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!