இதுவும் இந்தியாதான்!

ஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: தி.குமரகுருபரன்

சென்னை மாநகரம் கோடை மழையை ருசித்துக்கொண்டிருந்த ஒரு மாலை. ‘இப்போது வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? கையளவு மறைவுகூட இல்லாமல் மழையிலும் வெயிலிலும் வானமே கூரையாக வாழும் சாலையோரப் பெண்களின் வாதை என்ன?’ கேள்விகள் அறுத்தன.

மறுநாள் அதிகாலை மணி  5. 45.  சென்ட்ரலை ஒட்டிய வால்டாக்ஸ் ரோடு. முந்தைய தினம் பெய்த மழையில் சேறும், அழுக்குமாய் கால் வைக்கவே கூசும் தெரு. பிய்ந்துபோன பாய்களில், மீன்பாடி வண்டிகளில், கடைகளின் படிக்கட்டுகளில், பெரிய பெரிய பார்சல்களின் மேல்... எனப் பெண்கள், தங்களை மறந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கட்டிக்கொண்டு சில குழந்தைகளும். தெருவோரங்களிலேயே பிறந்து, வளர்ந்து, திருமணம் முடித்து, கிடைத்த மறைவுகளில் தாம்பத்யம் சுகித்து, அடுத்த தலைமுறைகளையும் இதே அழுக்குத் தெருக்களுக்கு வாரிசாகக் கொடுத்தவர்கள்.

புது ஆட்களின் அரவம் கேட்டுத் தெரு நாய்கள் தங்கள் கடமையைச் செய்ய, உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த சில பெண்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். ‘`ஒரு நிமிசம் மேடம்’’ என்றவர்கள், ஓடிப் போய், தெருவோரக் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு வந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்