சோறு முக்கியம் பாஸ்! - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும்... வயிற்றுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது... கூடவே, உணவகத்தின் சூழல் மனதுக்கு இதமாக இருக்க வேண்டும்...  இவையெல்லாம் ஒன்றாக வாய்த்தால்  நிச்சயம் அது அற்புதமான விருந்து அனுபவம்! பெரும்பாலும், இதுமாதிரி அமைவதில்லை. நல்ல உணவு கிடைத்தால், ஒன்றிச் சாப்பிடும் சூழல் இருக்காது; சூழல் நன்றாக இருந்தால், சாப்பாட்டு ருசியாக இருக்காது. 

நல்ல உணவும் நல்ல சூழலும் வாய்ப்பது அபூர்வம். அப்படியொரு தருணம் ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள,  `தோட்டத்து விருந்து’ உணவகத்தில் அமைந்தது. மலைவேம்பு, தென்னை, கொய்யா மரங்கள் நிறைந்த தோட்டம்... சுற்றிலும் பூஞ்செடிகள். தோட்டத்துக்கு மத்தியில் மூன்று குடில்கள். ஐம்பது பேர் வசதியாக அமர்ந்து சாப்பிடலாம். பச்சைச் சீருடை அணிந்த இளைஞர்களோடு உணவகத்தின் உரிமையாளர் சிவானந்தமும் இன்முகத்தோடு வரவேற்கிறார்; பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறார்.

எல்லா உணவிலும் இயல்பான ருசி... கொங்கு வட்டாரத்துக்கேயான லகுவான மசாலா. `ஏழாம் சுவை’க்காகச் சேர்க்கப்படும் எந்த எக்ஸ்ட்ரா ரசாயனமும் இல்லாதது ஸ்பெஷல். அன்லிமிடெட் மீல்ஸ் 70 ரூபாய். சைவம், அசைவம் இரண்டும் உண்டு. சைவச் சாப்பாட்டில் ஒரு தானிய சாம்பார், ஒரு பொரியல், ரசம். கொள்ளு, பச்சைப்பயறு... என தினமொரு தானியம் போட்டு சாம்பார் வைக்கிறார்கள். கொங்கு வட்டாரத்தில் மட்டுமே இந்த தானிய சாம்பாரைச் சுவைக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick