“புயலுக்கு நன்றி!” | Meet Anjali Patil: The Puyal from Kaala - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“புயலுக்கு நன்றி!”

சா.ஜெ.முகில் தங்கம் - படங்கள்: பா.காளிமுத்து

டிக்க வந்த எட்டு ஆண்டுகளில் 17 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளில் சொந்தக்குரலில் பேசியிருக்கிறார், ‘காலா’வில் ‘புயலாக’ வந்த அஞ்சலி பாட்டில்.

“சர்வதேச விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். விருதுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“விருதுகள் பணமாக இருந்தால், நன்றாக இருக்கும் (சிரிக்கிறார்). நாம் நன்றாகத்தான் செய்கிறோம் என்ற உணர்வினைக் கொடுக்கக்கூடியவை விருதுகள். ஆனால், அவை மட்டுமே என் இலக்கு இல்லை. தேசிய விருது பெற்றபின் பலரும் நான் சீரியஸான ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என முன்முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், நான் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் செய்ய விரும்புகிறேன். நான் ‘காலா’வில் நடிக்க முடிவு செய்தபோது ‘நீ கமர்ஷியல் படமெல்லாம் பண்ணுவாயா?’ என, பலர் ஆச்சர்யமாகக் கேட்டனர். எனக்கு அப்படி வேறுபாடுக ளெல்லாம் இல்லை. எனக்குப் பிடித்த கதைகளை நான் தேர்ந்தெடுக்கிறேன்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick