கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்! | Interview with dazzling girl Aishwarya Rajesh - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/07/2018)

கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்!

சுஜிதா சென் - படம்: ஜி.வெங்கட்ராம்

மிழ் சினிமாவின் யதார்த்த முகம் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தக் காமுக்காபட்டி அன்புச்செல்வியின் கால்ஷீட் டைரியில், இப்போது மணிரத்னம், கெளதம் மேனன், வெற்றி மாறன், ஹரி... என்று மாஸ் இயக்குநர்களின் படங்கள்!

“ `சாமி-2’ படத்தில் திரிஷாவுக்கு பதிலா நடிச்சிருக்கீங்க. எப்படி இருந்தது?”

“அவங்களுக்குப் பதிலா என்னை நடிக்கக் கேட்டப்போ, ‘இதுக்கு திரிஷாதான் கரெக்ட். மக்கள் மத்தியில் அவங்க கதாபாத்திரம் நல்லா பதிஞ்சிடுச்சு. நிச்சயம் நான் செட் ஆக மாட்டேன்’னு ஹரி சார்ட்ட சொன்னேன். அதுக்கு அவர், ‘எங்களுக்கு பவர் ஃபுல்லான ஒரு ஹீரோயின் வேணும். அதுக்கு நீங்க சரியா இருப்பீங்க’னு சொன்னார். தவிர, ஹரி சாரோட சேர்ந்து வேலை பார்க்கணும் என்பது ரொம்பநாள் ஆசை. ஏன்னா, கதை சார்ந்த படங்களைத் தவிர ஒரு கமர்ஷியல் படத்துலகூட நான் நடிச்சதில்லை. அதையும் முயற்சி பண்ணணும்னு தோணினதால இதில் நடிக்க ஒப்புக்கிட்டேன்.”