சோறு முக்கியம் பாஸ் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

காலம்  சக்கரம் மாதிரி சுழன்றுகொண்டேயிருக்கிறது. எவற்றையெல்லாம்,  ‘வேண்டாம்’  என்று விலக்கினோமோ, அவற்றையெல்லாம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்கேனும்,  ‘இயற்கை உணவு’, ‘சிறுதானிய உணவு’ என்று போர்டு தொங்கினால் குவிந்துவிடுகிறார்கள் மக்கள். சர்க்கரை, மாரடைப்பு, சிறுநீரகப் பழுது, ரத்த அழுத்தம் என... தொற்றாத நோய்கள் மனிதர்களை விரட்ட விரட்ட, மக்கள் தங்கள் பழைய வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

சிறுதானிய உணவுகளை ஏனோதானோவென்று சமைக்க முடியாது. ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு விகிதத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்கிறது. தனி ருசி இருக்கிறது. சிறுதானியங்களில் தயிர்சாதம் செய்ய வேண்டுமென்றால், குழைய வேகவைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல்  என்றால்  முக்கால் பதத்தில் இருக்க வேண்டும். சாம்பார் சாதம் மத்திமமாக இருந்தால்தான் ருசிக்கும். பெரும்பாலான சிறுதானிய உணவகங்களில் எந்தச் சாதம் சாப்பிட்டாலும், ஊறவைத்த அரிசி மாதிரி மென்று சாப்பிடவேண்டியிருக்கிறது. எந்தச் சுவையும் சாதத்தோடு ஒட்டுவதில்லை. மருந்து மாதிரிதான் சாப்பிடவேண்டியிருக்கிறது. நுட்பமறிந்து சமைத்தால், பிற தானியங்களில் செய்வதைவிட மிகவும் சுவையாகச் சிறுதானியப் பதார்த்தங்களைச் செய்ய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick