பணம் பழகலாம்! - 21 | Financial Awareness - PFRDA - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பணம் பழகலாம்! - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன்

டந்த இதழில் என்.பி.எஸ் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் இந்தக் கணக்கை எப்படித் தொடங்குவது, பராமரிப்பது என்பதைப் பார்ப்போம்.

என்.பி.எஸ்., டிரஸ்ட் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் அமைப்பு. ரெக்கார்டுகளைப் பராமரிப்பது சி.ஆர்.ஏ-வின் (CRA – Central Record Keeping Agency) பொறுப்பு.  பி.ஓ.பி (POP –- Point of Presence) என்பவர்கள், என்.பி.எஸ்-ஐ விநியோகிப்பவர்கள். ஃபண்டுகளை மேனேஜ் செய்வதற்கு ஃபண்டு மேனேஜர்கள் தனியாக இருப்பார்கள். இதுபோன்ற இன்னும் பல அங்கங்கள் சேர்ந்ததுதான் `என்.பி.எஸ் சிஸ்டம்.’

இத்தனை நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நீங்கள் என்.பி.எஸ் கணக்கைத் தொடங்க வேண்டுமென்றால், உங்கள் அருகில் உள்ள வங்கிகளை அல்லது அஞ்சலகங்களைத் தொடர்புகொள்ளுங்கள். இவர்களெல்லாம் விநியோகஸ்தர்கள் (பி.ஓ.பி) ஆவார்கள். இவர்கள் உங்களுக்கு வேண்டிய வேலைகளைச் செய்து, கணக்கையும் தொடங்கிக் கொடுப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick