இளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!” | Ilaiyaraaja Turned 75 - Maestro Ilaiyaraaja Birthday Special - Ananda Vikatan | ஆனந்த விகடன்

இளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!”

ப.திருமாவேலன், ரீ.சிவக்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்

பெத்த பிள்ளைக்கு ‘ராசய்யா’ என்று பெயர் வைத்த அந்த பண்ணைபுரத்துப் பெற்றோர், ‘இசையய்யா’ என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த இசைக்குழந்தைக்கு 75 வயது என்றால் நம்புவது கடினம்தான். இந்த வயதிலும் தசை முழுக்க இசையாய் நடமாடுகிறார் இசைஞானி. கொடும் வெயில் சூழ்ந்த வெப்ப நேரத்தில் அந்த ராகப் பனிமலைக்குள் செல்லும் போது ஆர்மோனியத்தால் அபிஷேகம் செய்கிறது ராஜாவின் குரல். ஜூன் 2, அவர் முக்கால் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கிறார்.

‘‘75 என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றால், ‘‘எனக்கு இல்லை’’ என்கிறார். ‘‘ஆமாம்! சர்ட்டிபிகேட் பார்த்து வாழ்பவர்களுக்குத்தானே வயது?” என்றோம். சின்னச்சிரிப்பை சிந்தவிட்ட அவர் சொல்கிறார்: ‘‘அதுவாக ஆகிவிட்டால் வயது இல்லை”. ஆமாம்! இசைக்கு ஏது வயது? இளையராஜாவுக்கு ஏது வயது? எங்களைப் பார்க்கிறார். ஆனால் பண்ணைபுரத்தை நோக்கிப் பயணம் செய்கின்றன அவரது கண்களும் மனதும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick