எங்கே வாழ்வது?

க.சுபகுணம்

லகம் முழுவதும் இந்த நிமிடத்தில் 41 பேர் தங்களது இருப்பிடத்தைத் தொலைத்துவிட்டு மறுவாழ்வு தேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்து முடிப்பதற்குள் அந்த எண்ணிக்கை நூற்றைத் தாண்டிவிடும். இரண்டு நாடுகளுக்கிடையில் நடக்கும் போரினாலோ, ஒரே நாட்டுக்குள் நடக்கும் இனக்கலவரத்தாலோ இவர்கள் அகதிகள் ஆகவில்லை. இவர்கள் சூழலியல் அகதிகள். இதில் உலகிலிருக்கும் எல்லோருக்கும் பங்கிருக்கிறது.

வெள்ளம், புயல், அனல் காற்று,  பூமி வறண்டு ஏற்படும் பஞ்சம் ஆகிய பல்வேறு காரணிகளால் உலகம் முழுவதிலும் நிமிடத்திற்கு 41பேர் என்ற விகிதத்தில் தனது இருப்பிடத்தைத் தொலைத்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரும்பிச் செல்வதில்லை. தள்ளப்படுகிறார்கள். மோசமான சூழலியல் விளைவுகளால் தங்களது வாழிடத்தைத் தொலைத்து, இருக்க இடம்தேடி வாழப் பிழைப்புதேடி,  தாங்கள் வாழ்ந்த வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நாட்டிற்குள்ளேயோ, அண்டை நாடுகளையோ நாடிச்செல்லும் அவர்கள்தாம் சூழலியல் அகதிகள்.

“சூழலியல் அகதிகள்” என்ற சொல் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அது சர்வதேசச் சட்டங்களால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதை ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாகவே கருதுகிறார்கள். இடம் பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு ஒன்று அந்தக் கூற்றுக்கான விளக்கத்தை வரையறுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick