“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, பாரதிராஜா

"ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி, அவரை இனி ‘சூப்பர் ஸ்டார்’  என்று அழைக்க வேண்டாம்; தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள்’’ என ரஜினி ரசிகர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ‘காந்திய மக்கள் இயக்க’த்தின் தலைவர் தமிழருவி மணியன்.  

அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.

‘`தமிழருவி மணியன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி... இருவரில், ரஜினிகாந்தின் அரசியல் குரு யார்?’’

‘`ரஜினிகாந்துக்குத் தமிழருவி மணியன் ஆலோசகரும் கிடையாது, அறிவுரையாளனும் கிடையாது...  உற்ற தோழன். ரஜினிகாந்தைப் பொறுத்தவரையில், அவர் என்னை உடன் பிறந்த சகோதரனாக பாவிக்கிறார்.’’

‘`சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது... என, தமிழக இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியவர் ரஜினிகாந்த் என்ற குற்றச் சாட்டுகள் தொடரும் நேரத்தில், ‘ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி’ என்கிறீர்களே..?’’

‘`காந்தியம் முன்னெடுத்து வைக்கக்கூடிய எளிமை, பணிவு, அடக்கம் மூன்றும் ரஜினிகாந்திடம் இருக்கிறது... உடனே ‘ரஜினிகாந்த் மகாத்மாவா...’ என்று நீங்கள் கேட்டுவிடக் கூடாது. காந்தியம் என்பது பொதுவாழ்வில் தன்னலத் துறப்பு. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்தான் பொதுவாழ்வில் முன்னிறுத்தப்பட வேண்டும். தன்னுடைய நலனைப் பெருக்கிக்கொள்ளவோ, குடும்ப நலனைக் கூட்டிக்கொள்ளவோ ரஜினிகாந்த் அரசியல் களத்துக்கு வரவில்லை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick