“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்!” | Interview With Film director Balaji Sakthivel - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்!”

சனா - படம்: க.பாலாஜி

 “என் எந்தத் தயாரிப்பாளருக்கும் கதை சொல்லமாட்டேன். ஏன், படத்தோட பெயரைக்கூடச் சொல்லமாட்டேன். ஆனா, இந்தப் படத்தை விஜய் மில்டன், புதிய தயாரிப்பாளர் இசக்கி துரையோட சேர்ந்து உருவாக்கியிருக்கேன். அவருக்கு இதுதான் முதல் படம். விஜய் மில்டன் அவரை என்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கும்போது, ‘என் நிபந்தனைகளுக்கு ஓகேவா?’ன்னு கேட்டு, அவர் சம்மதம் சொன்னபிறகுதான், ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்” - தயாரிப்பாளரைப் பற்றிய அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், பாலாஜி சக்திவேல். புதுமுகங்களை வைத்து  இயக்கியிருக்கும், ‘யார் இவர்கள்?’ படம் குறித்து அவரிடம் பேசினேன்.

“உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சுப் படம் எடுக்கிறது உங்க ஸ்டைல். இந்தப் படமும் அப்படித்தானா?”

“என்னோட ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’படங்கள்ல எல்லாம் உண்மைச் சம்பவங்களைத் துல்லியமா காட்டியிருப்பேன். ஆனா, இந்தப் படத்துல உண்மை அப்பட்டமா இருக்காது. ஆனா, எல்லோரும் நான் சொல்ற அந்தப் பிரச்னையைக் கடந்துதான் வந்திருப்பாங்க. படம் பார்க்கிற ரசிகர்களும் அந்தப் பிரச்னையை சந்திச்சிருந்தா, ‘யார் இவர்கள்?’ அவங்களுக்கான படம்தான்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick