டேட்டா சுரண்டலுக்கு டாட்டா!

ஞா.சுதாகர்

ப்போதும் இல்லாத அளவுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் உலவத் தொடங்கியிருக்கின்றன. அதில் பாதி நாமே பகிர்ந்து கொண்டவை. மீதி நமக்கே தெரியாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மிடமிருந்து பெற்றவை. இந்தத் தகவல்களை நிறுவனங்கள் எப்படிக் கையாளுகின்றன, அவற்றை வைத்து என்ன செய்கின்றன, விற்பதாக இருந்தால் யாருக்கு, எதற்கு... என்பதை எல்லாம் முறைப்படுத்த இப்போதைய தகவல் பாதுகாப்பு சைபர் சட்டங்கள் வலுவானதாக இல்லை!

நொடிக்கு நொடி அப்டேட் ஆகும் டெக் நிறுவனங்களைப் போல, இந்த சட்டங்கள் வேகமாக அப்டேட் ஆவதில்லை. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் இதுதான் நிலை. இந்தப் பிரச்னைக்கான தீர்வாகத்தான ஐரோப்பிய யூனியன் கொண்டு வந்துள்ள சட்டம் GDPR (General data protection regulation).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick