சோறு முக்கியம் பாஸ்! - 15 | Food: Salem - Sri Parasakthi Restaurant - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/06/2018)

சோறு முக்கியம் பாஸ்! - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வெ.நீலகண்டன் - படங்கள்: எம்.விஜயகுமார்

பெரும்பாலும் உணவகங் களைப் பொறுத்தவரை, ‘வாய் வார்த்தை’தான் விளம்பரம். சாப்பிட்டு அனுபவித்தவர்களின்  வார்த்தைகள், காற்றைவிட வேகமாகப் பரவி அந்த உணவகத்தின் தலையெழுத்தைத் தீர்மானித்துவிடும். நகருக்கு மத்தியில் இருக்கும் ஓர் உணவகம் காற்றாடினால், ஒதுக்குப்புறமாக இருக்கும் ஓர் உணவகத்தில், அமர இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிறையும்.  காரணம்... முதல் வரியைப் படியுங்கள்!

சேலம், செவ்வாய்ப்பேட்டை, வெங்கடப்பன் சாலையில் சற்று உள்ளடங்கியிருக்கும் ‘ஸ்ரீஸ்ரீ பராசக்தி உணவக’த்தில் நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. 12 மணிக்குத் தொடங்கி 3 மணிவரை கல்யாண விருந்து மாதிரி பரபரத்துக்கிடக்கிறது உணவகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close