“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு!”

மா.பாண்டியராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குநர், ட்ராவலர் இப்போது நடிகர் என தன் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர் ஜி.எம்.குமார். இவர் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஹைனெஸ் கதாபாத்திரம் இவரை ஒரு தேர்ந்த நடிகராக மக்கள் மனதில் பதிய வைத்தது. தன் வயதையும், தனக்கிருக்கும் உடல் உபாதைகளையும் மீறி பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவரைச் சந்தித்தேன்.

“இயக்குநராக நான்கு படங்கள் மட்டுமே பண்ணியிருக்கீங்களே, அதற்கடுத்து ஏன் படம் பண்ணலை?”

“நான் எடுத்த நான்கு படங்களுமே சென்சார் போர்டு கொத்திப்போட்டதற்குப் பிறகுதான் ரிலீஸ் ஆச்சு. என்னை, `இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்காதீங்க’னு சொன்னாங்க. பல காட்சிகளை வெட்டினாங்க. `எந்தக் காட்சியையும் நீக்காம ரிலீஸ் பண்ண முடியாது. அப் நார்மலா படம் எடுக்காதீங்க’னு சொன்னாங்க. கமர்ஷியலா படம் எடுக்குறதுக்காக நான் சினிமாவுக்கு வரலை. அதனால் நான் அடுத்துப் படம் எடுக்கலை.  `அவருக்கு அந்தப் பழக்கம் இருந்துச்சு; இந்தப் பழக்கம் இருந்துச்சு; அதனாலதான் அடுத்துப் படம் எடுக்கலை’னு என்னைப் பத்தி நிறைய பேர் சொன்னாங்க. ஆனால், நான் படம் எடுக்காதததுக்கு சென்சார் போர்டுதான் காரணம். ஆனால் இப்போ என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. டெல்டா பகுதிகளில் ஆயில் எடுக்குறது சரியா தப்பா, விவசாயத்தோட எதிர்காலம் என்ன, சுற்றுச்சூழலுக்காக இப்போ நடக்குற போராட்டங்கள் சரியா, இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை என்னன்னு ஒரு கதை ரெடி பண்றேன். கண்டிப்பா இதைப் படமாப் பண்ணிடுவேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick