அஜித் விசுவாசம் அப்டேட்ஸ்! - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல!

உ.சுதர்சன் காந்தி

டப்பிடிப்பில் கலந்து கொள்வதைத் தவிர, மற்ற நேரங்களில் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். ரசிகர் மன்றத்தைக் கலைத்து வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் ஒருமுறையாவது பார்த்து விடமாட்டோமா என்று காத்திருக்கிறது ரசிகர் படை.

‘உங்களுக்கு இருக்கிற இந்த ரசிகர் பலத்தை அப்படியே அரசியலுக்கு மடை மாற்றலாமே’ - பலரும் பல சமயங்களில் யோசனை சொன்னபோதெல்லாம், ‘இது ரசிகர்களின் அன்பு. மகிழ்விக்கிறது, மரியாதையா நடத்துறதைத்தவிர அவங்களுக்கு என்னால் வேறென்ன திருப்பி செஞ்சிட முடியும்?’ என்பார். இந்த அன்புதான் அஜித்தின் பலம்.

அதனால்தான் ‘விசுவாசம்’ படப்பிடிப்பை நேரில் காண பேருந்துகள் எடுத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று குவிந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் புதிய கெட்டப் ரகசியம் காப்பதால், ‘படப்பிடிப்பு பாதிக்கும். யாருக்கும் அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பினாலும் ரசிகர்களின் வருகை குறையவே இல்லையாம்.

‘விசுவாசம்’ படப்பிடிப்பு எந்தளவில் இருக்கிறது. இதில் அஜித் என்னமாதிரியான தோற்றத்தில் வருகிறார் என்பது குறித்து அந்தப் படக்குழுவில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்களில் இருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick