“வாழ்க சீரியல் ரசிகர்கள்!” | Interview With actress Rachitha Mahalakshmi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“வாழ்க சீரியல் ரசிகர்கள்!”

அய்யனார் ராஜன் - படம்: தி.குமரகுருபரன்

ஹாட்ரிக் விருது, ரஷ்யப் பயணம், புது வீடு...  செம உற்சாகத்தில் இருக்கிறார், ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா. விரைவில் கணவர் தினேஷ் ஜோடியாக சீரியல் ஒன்றில் நடிக்க விருக்கிறார்.

‘`என் சொந்த ஊர் பெங்களூர்லயே இப்போ என்னை எங்கே பார்த்தாலும் மக்கள் மீனாட்சின்னுதான் கூப்பிடறாங்க, அந்தளவுக்கு ‘மீனாட்சி’ என் அடையாளமாவே ஆகிடுச்சு. ‘சரவணன் மீனாட்சி’ முதல் சீசன் ஹீரோயின் ஸ்ரீஜா நல்ல பேர் வாங்கியிருந்தாங்க. ஸ்ரீஜா - செந்தில் நிஜ வாழ்க்கையிலேயும் சேர்ந்துவிட, சீஸன் 2வில் ஹீரோயினா செலக்ட் ஆனேன். அப்போ, ‘ஸ்ரீஜாவை ஏத்துக்கிட்ட மாதிரி மக்கள் என்னையும் ஏத்துக்குவாங்களா’னு தோணுச்சு. ஆனா, அந்த சீசன்லேயே ரெண்டு மூணு ஹீரோக்களைக் கடந்துட்டு, இப்போ அடுத்த சீசன்லேயும் நாலாவது ஹீரோகூட சீரியல் போய்க்கிட்டு இருக்கு. எனக்கே இதை நம்ப முடியலை. வாழ்க சீரியல் ரசிகர்கள்!

சீரியலை ஒளிபரப்பும் சேனல்கிட்ட இருந்தே விருது வாங்குறது, என்னைப் பொருத்த வரை பெரிய விஷயம். ‘அவங்களே ஒளிபரப்புவாங்களாம்; அவங்களே விருது கொடுத்துக்குவாங்களாம்’னு ஈஸியா கமென்ட் பண்ணலாம். ஒரே ஸ்கூல்லதான் எல்லோரும் படிக்கிறாங்க; ஆனா, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்ற பசங்களைக் கொண்டாடுறதில்லையா... அந்த மாதிரிதான் இதுவும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick