புக் மார்க்

ங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. ``தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி மொழியையும் இலக்கியத்தையும் பயில்பவர்களாக இருக்கிறார்களே தவிர, குளத்தில் குதித்து நீந்தும் சிறுபிள்ளைகளின் மகிழ்ச்சியோடு தமிழ் இலக்கியத்தில் முங்கித் திளைப்பவராக இல்லை” எனச் சொன்ன தங்கப்பா தன் இறுதி மூச்சுவரை சிறுபிள்ளையின் மகிழ்ச்சியோடு இலக்கியப் பணியாற்றினார். கடந்த வாரம் தன் 84-வது வயதில் இயற்கை எய்திய தங்கப்பா, தமிழ் ஆர்வலர்களுக்கு ஆகச்சிறந்த முன்னோடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick