சோறு முக்கியம் பாஸ்! - 16 | Food: Kumbakonam - Sri Mangalambiga Vilas - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ்! - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன் - படங்கள்: ம.அரவிந்த்

தொன்ம வாசனை மீதமிருக்கும் தமிழக நகரங்களில் முதன்மையானது கும்பகோணம். வழிபாடுகள், சடங்குகள், கலைகள், வேளாண்மை, விளையாட்டு கள்... என வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும் பல விஷயங்கள் இன்னும் அங்கே உயிர்ப்போடிருக்கின்றன. அந்த வரிசையில் பாரம்பர்ய உணவுகளும் உணவகங்களும் அடக்கம்.

கும்பகோணம் நகருக்கு மத்தியில் பிரமாண்டமாக விரிந்து நிற்கும் கும்பேஸ்வரர் சந்நிதியின் உள்ளே இருக்கிறது ‘மங்களாம்பிகா விலாஸ்’ காபி ஹோட்டல்.  1914-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உணவகம். பல மகாமகங்கள்  கடந்து இன்றுவரை, தன்மை மாறாமல் இயங்கிவருகிறது.  தி.ஜானகிராமன், எம்.வி.எம்., கரிச்சான் குஞ்சு போன்ற பல இலக்கிய ஆளுமைகளை மயக்கிப்போட்ட உணவகம். `கோயில் கடை’ என்கிறார்கள் உள்ளூர்காரர்கள். கும்பகோணத்துக்கு வரும் வெளியூர்காரர்கள் தேடிவந்து சாப்பிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick