“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

சுஜிதா சென்

ஹூமா, ‘காலா’வில் கவர்ந்த, ‘காலா’வைக் கவர்ந்த கண்ணம்மா.

“சமையல், ட்ராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.” என்று புன்னகைத்தபடி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்.

“தமிழ் சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?”

“நானும் தனுஷும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஒருநாள் அவர் எனக்கு போன் பண்ணி, ‘உங்களுக்கு ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கு நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நான் அவர்கூட ஹீரோயினா நடிக்கக் கூப்பிடுறார்னு நெனச்சு ஓகே சொன்னேன். அப்புறம்தான் இந்தப் படத்துல, ‘நான் ஹீரோவா நடிக்கலை. இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன். ஆனால் ஹீரோ வேற’ன்னு சொன்னார். ‘அப்படி யார்’னு கேட்டப்போதான் ரஜினி சார் படம்னு தெரிய வந்துச்சு. உடனே கிளம்பி சென்னைக்கு வந்துட்டேன். சாதாரணப் பெண் கதாபாத்திரங்களைவிட சவாலான பெண் கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதைத்தான் நான் விரும்புறேன். சரீனா கதாபாத்திரம் என்னை ரொம்பக் கவர்ந்ததால் அதில் நடிக்கச் சம்மதிச்சேன். இப்போ இருக்குற அரசியலை மக்களோட பார்வையில இருந்து சொல்ற இயக்குநர் இரஞ்சித் சார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மாதிரி, டீட்டெயிலிங்குக்காகத் தனியா ஆராய்ச்சிகள் பண்ணுபவர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick