செய்திகள் வாசிப்பது...

தமிழ்மகன், தமிழ்ப்பிரபா - படங்கள்: க.பாலாஜி

80களில் தமிழர்களுக்கு இருந்த இரண்டு முக்கியமான பொழுதுபோக்குகள்  தமிழ் சினிமாவும் தூர்தர்ஷனும். இன்று நாள்தோறும் பிரேக்கிங் நியூஸ், பிக் பிரேக்கிங் நியூஸ், ஃப்ளாஷ் நியூஸ் எல்லாம் ஓடினாலும் அன்று தூர்தர்ஷனில் ஒருநாளில் ஒரே ஒருமுறை செய்தி வாசிப்பவர்களுக்கு அவ்வளவு மவுசு! அன்றைய டிவி செய்தியாளர்களைச் சங்கமிக்கவைத்தோம். ஒவ்வொருவருக்கும் உற்சாகமோ உற்சாகம்!

வரதராஜன்: “1972-ல நாங்க பம்பாய்ல இருந்தோம். முதல்முறையா அங்கேதான் டிவி-யைப் பார்த்தேன். அப்போ ஞாயிற்றுக்கிழமையில நேஷனல் நெட்வொர்க் சேனல்ல `இருகோடுகள்’ படம் பார்த்துட்டிருந்தப்போ `இந்த டிவியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருமான்னே தெரியலை’னு சொல்லிட்டிருந்தேன். பார்த்தா, 1975-ல தமிழ்நாட்டுக்கு டிவி வந்துடுச்சு. அப்புறம் 1977-ல டிவி-யில நானே வந்தேன். `எதிரொலி’க்கு, தொடர்ந்து கடிதங்கள் எழுதுவேன். அப்போ ஒருமுறை, `எனக்கும் செய்திகள் வாசிக்கணும்னு ஆர்வமா இருக்கு. வரலாமா’னு கேட்டிருந்தேன். ஒரு மாசம் கழிச்சு தூர்தர்ஷன்ல இருந்து என் வீட்டுக்கு அப்ளிகேஷன் வந்தது. ஃபில் பண்ணி அனுப்பினேன். ரெண்டு மாசம் கழிச்சு ஆடிஷன் நடந்தது. 42 பேர் கலந்துகிட்டாங்க. அதில் நான் மட்டும்தான் தேர்வானேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick