இன்பாக்ஸ்

 ராஜு முருகனின் `ஜிப்ஸி’யில் ‘ஜீவாவின் ஜோடியாக நடிக்கும், ஆப்பிள் மாதிரி இருக்கும் பெண் யார்?’ என, கடந்த வாரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து எல்லோருமே கேட்டார்கள். அந்த ஆப்பிள் பெண் வேறு யாருமல்ல... 'மிஸ்.ஹிமாச்சல் பிரதேஷ்' நடாஷா சிங்!  ``படித்தது இன்ஜினீயரிங். பிடித்தது மாடலிங்’’ என்று சொல்லும் நடாஷா, ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து மாடலிங்குக்காக மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். ``தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவுல நடிப்பேன்னு கனவுலகூட எதிர்பார்க்கலை. நாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த மக்கள் என்கிட்ட அதுக்குள்ள ஆட்டோகிராஃப் வாங்கிட்டாங்க. செம ஆச்சர்யமா இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடா. அடடா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick