தெர்ல மிஸ்!?

``எனக்கு வயது 18. சினிமாவில் சாதிக்கும் ஆசை உண்டு. ஆனால் சினிமா உலகில் பெண்கள் என்றாலே வேற்றுப்பார்வை உண்டே... அதே தயக்கம்தான் எனக்கும். திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு முறையான அமைப்பு அல்லது வழிமுறை ஏதும் உள்ளதா? இன்னும் சினிமா உலகம் என்றால் பெண்கள் பயப்படும் நிலைதான் உள்ளதா?’’

- மகேஸ்வரி, ஈரோடு

``பெண்கள் திரைத்துறையில் இருப்பது பற்றி வேற்றுப்பார்வை கண்டிப்பாக உண்டு. அதைப் பற்றிக் கவலைப்பட்டு, திரைத்துறைக்கு வரத் தயங்குகிறீர்கள் என்றால்,  உங்களிடம் எனக்கொரு கேள்வி உண்டு... எல்லாத் துறைகளிலும் பெண்களை வேற்றுப்பார்வை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்தானே? மற்ற எந்தத்  துறையைக் காட்டிலும் மனவலிமை பிரதானமாய்த் தேவைப்படும் துறை இது.  நம்மை நாமே வடிவமைப்பதுதான் இங்கு நிற்க வழிமுறை. யாரையும் பின்தொடராமல் எல்லாப் படைப்பு களிலிருந்தும் கற்றுக்கொண்டு, தன் கலையில் தனித்துவம் படைப்பதுதான் இங்கு சாதிக்க வழிமுறை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!