“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு!”

சனா, படம்: வீ.நாகமணி

``சீரியல்ல நடிக்கப் போறேன்னு சொன்னவுடனேயே என்னைவிட என் மாமியார் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க.  சரியா எட்டு மணிக்கு டிவி முன்னாடி பிரசென்ட் ஆகிடுவாங்க. ‘மா, இன்னைக்கு உன் நடிப்பு நல்லாயிருந்துச்சு மா’னு உடனே போன் பண்ணிச் சொல்லுவாங்க. ஆனா, என் வீட்டுக்காரர்தான், ‘ உன்னைக் கஷ்டப்படுற மாதிரி பாக்க முடியல’னு ரொம்ப ஃபீல் பண்றார்’’ - சிரித்தபடியே உற்சாகமாகப் பேசுகிறார் சன் டிவி ‘நாயகி’யின் நாயகி விஜயலட்சுமி.

``என்ன திடீர்னு சீரியல் பக்கம் வந்துட்டீங்க?’’

``கல்யாணம் ஆனவுடன் சினிமா வேண்டாம்னு நான்தான் முடிவு பண்ணுனேன். மகன் நிலன் பிறந்தவுடன் அவனைப் பார்த்துக்கவே  நேரம் சரியா இருந்துச்சு. இடையில் ‘பண்டிகை’ படம் தயாரிச்சேன். இதுக்கு இடையில் நிறைய சீரியல்கள் வாய்ப்பு வர ஆரம்பிச்சது. ஆனா, அப்ப எனக்கு சீரியல்ல நடிக்கிற ஐடியா இல்ல. கேம் ஷோ ஏதாவது வந்தா பண்ணலாம்னுதான் இருந்தேன். ஏன்னா, பெரிய கமிட்மென்ட் இருக்காது. நான், நானா போயிட்டு ஜாலியா வரலாம்னு நினைச்சேன்.

ஒரு நாள் நானும், ஃபெரோஸூம் படத்துக்குப் போயிருந்தோம். அங்க பார்த்தா ‘தெய்வமகள்’ சீரியல் இயக்குநர் குமரன்சார் வந்திருந்தார். `இந்தப் பொண்ணு நம்ம சீரியலுக்கு கரெக்டா இருப்பா’னு, என்னைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தோணியிருக்கு.  என் வீட்டுக்காரர்கிட்ட அவரை அறிமுகப்படுத்திக்கிட்டு, ‘என் சீரியல்ல மேடம் நடிப்பாங்களா’னு கேட்டார். ஃபெரோஸ் உடனே, ‘பக்கத்துலதானே இருக்காங்க அவங்ககிட்டயே கேளுங்க’னு சொல்லிட்டார். அப்புறம் என்கிட்ட குமரன் சார் கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. `நாயகி’ சீரியல்ல நடிக்க ஓகே சொல்லிட்டேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்